• Jan 18 2025

நீங்கள் எல்லாம் சாக்கடையில் ஊறும் தவளைகள்! ஜெயமோகனுக்கு செருப்படி பதிவு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் வேட்டையாடி வருகிறது.

ஆனாலும் இந்தப் படத்தை மலையாளப் பொறுக்கிகளின் கூத்தாட்டம் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் பொறுக்கி என்று சொன்ன அந்த சங்கியும், மலையாள பொறுக்கிகள் என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊரும் இரண்டு தவளைகள் என இயக்குனர் நவீன்  கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை ஒன்ரை வெளியிட்டு இருந்தார். அதில் சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்ததில்லை. கருத்து சொல்வதில்லை. ஆனாலும் நான் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றுமல்ல. பிரச்சாரம் அல்ல. வெறும் வணிகம். 


மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலை தான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கும் வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் உள்ளது. அடிப்படை அறிவு கூட கிடையாது. எந்த நாகரிகமும் கிடையாது. குடிகுடிகுடி தான் என்று விமர்சித்து இருந்தார்.

இவ்வாறு, எழுத்தாளர் ஜெயமோகன் மலையாள பொறுக்கிகள் என்று விமர்சித்த விடயம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.


இவ்வாறான நிலையில் இயக்குனர் நவீன் தனது எக்ஸ் தள  பக்கத்தில் ஜெயமோகனை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில்,  தமிழ் பொறுக்கீஸ் என்று சொன்ன அந்த சங்கியும் (சுப்பிரமணியன் சுவாமி), மலையாள பொறுக்கிகள் என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகள்.

தமிழர்கள் கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும் அவர்கள் நம்மிடத்தில் தமிழையே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement