• Apr 17 2026

அட்ரா சக்க... அப்படி சொல்லுங்க மீனா! சன் டிவி சீரியலை ஓரங்கட்ட இதுதான் சரியான போட்டி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

500 மாலைகளை கட்டுவதற்காக மீனா தனது ஆட்களுடன் விறுவிறுப்பாக வேலைகளை செய்து வருகிறார்.

அந்த நேரத்தில் குல்பி ஐஸ் வர, ஸ்ருதி எல்லாருக்கும் வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறார். ஆனால் மீனா தனக்கு வேலை இருக்கு என்று மாலை கட்டுவதில் குறியாக இருக்கிறார்.

இதன் காரணமாக முத்து அந்த குல்பி ஐஸை வாங்கி மீனாவுக்கு ஊட்டி விடுகிறார். இதை பார்த்து எல்லாரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மறுபக்கம் ஒரே ஒரு ராத்திரியில் 500 மாலையை கட்டி முடிப்பார்களா என விஜயா கேட்க, அதெல்லாம் கட்டி முடிக்கலாம்  என மீனா சொல்கிறார். ஆனால் மீனாவை தவிர மற்ற எல்லாருமே தூங்கி விடுகிறார்கள்.


இடையில் தூக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த முத்து, மீனா தனியாக மாலை கட்டுவதை பார்த்து அவருக்கு டீ போட்டு கொடுக்கிறார்.

டீ நல்லா இருக்கானு கேட்க, அவர் நல்லா இருக்கு என சொல்லுகிறார். ஆனால் அதில் சர்க்கரையே போடலையே என முத்து சொல்ல, நீங்க காட்டுற அக்கறை எனக்கு போதும் என மீனா சொல்கிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

இடைவேளை தற்போது எதிர்நீச்சல் சீரியலை விட சிறகடிக்க ஆசை சீரியல் சுவாரஸ்யமாக செல்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமே குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement