• Apr 16 2026

கார்த்திக் நீங்க போகலாம்! வேற ஹீரோவ வச்சு சக்சஸ் பண்ணிக்கிறேன்! சவால் விட்ட இயக்குநர்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்திக்கை  தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவையே சேரும். தொடர்ந்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து அவரால் வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. 


இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் கார்த்திக் பற்றிய ஒரு தகவலை பேட்டியில் கூறி இருக்கிறார். கார்த்திக் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். 

ஆனால் அந்தப் படத்தில் முதலில் கார்த்திக் நடிப்பதற்கு விருப்பமே இல்லாமல் இருந்தாராம்.படப்பிடிப்பில் புலம்பிக் கொண்டிருந்த கார்த்திக்கிடம் விக்ரமன் உங்களுக்கு என்னதான் பிரச்சனை என கேட்டிருக்கிறார்.

அதற்கு கார்த்திக் இந்த படத்தின் கதை நந்தவன தேரு படத்தின் கதை போல இருக்கிறது. அதனால் மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டிருக்கிறார். 


அதற்கு விக்ரமன் அந்த படத்தின் கதை வேறு. இது கண்டிப்பாக வெற்றி அடையும்.அதற்கு மேலும் உங்களுக்கு இது திருப்தி இல்லை என்றால் நான் வேறொரு ஹீரோவை வைத்து இந்தப் படத்தை சக்சஸ் செய்து காட்டுகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு கார்த்திக் நீங்களே இந்த அளவு நம்பிக்கையுடன் இருக்கும் போது எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என அதன் பிறகு நடித்தாராம்.


Advertisement

Advertisement