• Sep 17 2024

ஜெய், ஜீவா, யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவரும் விதமாக திரைப்படங்களை எடுக்கக் கூடிய இயக்குநர்களில் முக்கியமானவர் தான் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான கலகலப்பு, கலகலப்பு 2, அரண்மனை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பின்னர் சுந்தர்.சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம்.

மேலும் இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்தோடு சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவர் இசையில் உருவாகியிருக்கும் முதல் பாடலை வெள்ளிக்கிழமை வெளியிடுகின்றனர்.

சுந்தர்.சி - ஜெய் -ஜீவா கூட்டணியில் வெளியான கலகலப்பு 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. எனினும் இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக காபி வித் காதல் திரைப்படத்திற்காக இந்த மூவர் கூட்டணி அமைந்துள்ளது.

அத்தோடு இந்த கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கும் காபி வித் காதல் திரைப்படத்தை அவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement