• May 06 2024

நடிகர் நாசர் வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்-இப்படியா நடிக்கனும்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் காவல்துறை அதிகாரியாக சிறிய வேடத்தில் அசத்தலான நடிப்பின் மூலம் அறிமுகமானவர் நாசர். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை உண்மையான கதாபாத்திரமாக ஏற்று நடித்து புகழ்பெற்ற நடிகராக உள்ளார்.

பன்முகத் திறமை கொண்டு விளங்கிய நடிகர் நாசர் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், மற்றும் பாடகராகவும் திரையுலகை கலக்கி வருகின்றார், இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டார்.

எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி நடிப்பவர் நடிகர் நாசர். திரைப்படத்திற்கு கதாநாயகனாக இருந்தாலும் சரி, கதாநாயகனுக்கு தந்தையாக இருந்தாலும் சரி, அமைச்சராக, காவல்துறை அதிகாரியாக என எந்த கதாபாத்திரத்தையும் அதேபோல் நடிப்பவர் தான் நாசர்,

இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கமலின் மக்கள் நீதி மைய கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இவரது மனைவி கமல் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவராக பொறுப்பு வகித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிப்பில் இருந்து விலக நாசர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் இதய பாதிப்பினால் நாசர் கடுமையாக அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் நாசர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் திரையுலகில் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். அதே சமயம் அவரின் உடல் நிலை விரைவில் குணமடைந்து மீண்டும் நடிப்பிற்கு திரும்பி வர அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement