• May 19 2024

படத்தை எடுத்தோமா நாலு காசை பார்த்தோமா என்று இருக்கணும்-வெற்றிமாறனுக்கு முகத்தடி கொடுத்த கஞ்சா கருப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பல பேரின் கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கியவர் தான் மணிரத்னம். இப்படம் கடந்த கடந்த 30ம் திகதி வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றாலும் நெக்கடிவ் கமெண்டுகளையும் அள்ளிக் குவித்தது.

இப்படம் வெளியாகிய நாளிலிருந்து ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும், அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் வெற்றிமாறன் கூறியது, மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் பேண வேண்டும். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள்.இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

 நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்று பேசி இருந்தார். வெற்றிமாறனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வெற்றிமாறனின் விவாதம் ஆகியிருக்கிறது. சொல்லப்போனால், தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே ராஜராஜ சோழன் இந்துவா? என்ற கேள்வி தான். இதுகுறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


இந்நிலையில் இது குறித்து கஞ்சா கருப்பு அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது,சோசியல் மீடியாவில் ராஜராஜ சோழன் இந்துவா? முஸ்லிமா? என்று பிரச்சனை செய்கிறார்கள். எதற்கு இதெல்லாம் என்று புரியவில்லை.

அவர் எந்த மதமாக இருந்தால் என்ன? படத்தை எடுத்தோமோ, சம்பாதித்தோமோ என இருக்க வேண்டும். ராஜராஜ சோழனின் மதம் குறித்து பேசுவதெல்லாம் தேவையில்லாத விஷயம். எதற்காக அதை குறித்து கிண்ட வேண்டும். நாட்டில் பேச வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கு.


அதை விட்டு இதெல்லாம் தேவையா? என்று பேசி இருக்கிறார். இப்படி கஞ்சா கருப்பு கூறியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement