• Jul 27 2024

மார்வெல் படங்கள் தயாரித்த நிறுவனத்தில் கோட் படமும் தயாரிப்பு! எந்த நிறுவனம் தெரியுமா?

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அருமையான கதைகளங்களுடன் நல்ல காட்சிகளுடனும் திரைப்படங்கள் வந்தாலும் எடிட்டிங் காட்சிகள் என்பது மிகவும் பின்தள்ளி காணப்படுகின்றது என்றே கூறலாம். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் கோட் படத்தின் vfx காட்சிகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்கப்போவதாக கூறப்படுகின்றது.


மங்காத்தா , மாநாடு போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் கோட் ஆகும். குறித்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரபு தேவா , பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்.


குறித்த படம் சயன்ஸ் பிக்சன் திரைப்படமாக காணப்படுவதனால்  அதிகமான சிஜி காட்சிகள் காணப்படுகின்றது. குறித்த காட்சிகள் பிரபல எடிட்டிங் நிறுவனமான "லோலா VFX " இல் தயாரிக்கப்படுகின்றது என்பதை இதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்  . குறித்த நிறுவனம் ஹாலிவுட் திரைப்படமான கேம் ஒப் திரோன்ஸ் , கேப்டன் அமெரிக்கா , ஆண்ட் மேன் போன்றவற்றிக்கும் VFX காட்சிகள் செய்து கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement