• Jan 19 2025

என்ட வாழ்க்கையில விவாகரத்து கான்செப்ட் வந்ததும்... தனது பர்சனல் விடயங்களை பற்றி மனம் திறந்த பிரபல நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகையாக காணப்பட்ட சொர்ணமால்யா தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்தும், விவாகரத்து குறித்தும் பேசி இருக்கிறார்.

அதன்படி அவர் கூறுகையில், ''என் வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்று நடந்தது.. அதன்பின் அதை விட்டு வெளியே வந்தோம்..அவ்வளவு தான்.. இப்போ இருக்கக் கூடிய புரிதல் நிச்சயமாக அப்போது இல்லை.

ஆனாலும் அந்த திருமண முறிவினால் நான் உடைந்து போகவில்லை என்று சொல்ல மாட்டேன். அவ்வாறு சொல்லி தப்பிக்கவும் முடியாது. அந்த நேரத்தில் நல்ல வேளையாக என்னை சுற்றி நல்ல பெண்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தார்கள். 


என்னுடைய வாழ்க்கையில் விவாகரத்து என்ற கான்செப்ட் வந்த உடனே, என்னுடைய அம்மா என்னை எம்.ஏ. படிக்க சேர்த்து விட்டுவிட்டார். அந்த சமயத்தில் அவர் எதற்காகவும் வாழ்க்கை நிற்க போவதில்லை. ஆகையால் படிப்பில் கவனம் செலுத்து என்றார். 

அத்துடன், என்னுடைய திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்ததற்கு என்ன காரணமாக வேண்டுமானலும் இருக்கலாம்..எனக்கு அப்போ வயது 21 தான். அவருக்கு 25 இதுவாகவும் இருக்கலாம்... 


அந்த நேரத்தில் எங்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை இருந்து இருக்கும். எனக்கு அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. எனது பெற்றோரும் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல முடியும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.' என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement