• May 20 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது.

இதனைத் தொடர்ந்து இவரின் 61 வது படத்தினையும் எச். வினோத் இயக்குவதோடு போனி கபூர் தயாரிக்கின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனிடையே இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தின் 62-வது படத்தை இயக்க இருக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is aeb3b441-ajith-cinesamugam-1.jpg

இந்நிலையில், AK 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற October மாதம் துவங்கும் என்றும், அதன்பின் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை ஒரே வீச்சில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும், அனைத்து பணிகளையும் முடித்து படத்தை வருகிற 2023ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

https://www.youtube.com/embed/66paDJnH4XU

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement