வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதற்கு கூட்டம் இன்னும் அலைமோதியவாறு உள்ளன.
கோட் படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 126 கோடிகளை வசூலித்திருந்தது. இதை தொடர்ந்து தற்போது ஆறு நாட்களைக் கடந்த கோட் படம் மொத்தமாக 312 கோடிகளை வசூலித்துள்ளதாம். இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் காணப்பட்டாலும், இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதுவே இன்னும் அடைய முடியவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கோட் படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது கோட் படத்திற்கு சினேகாவின் கேரக்டருக்கு முதலில் நயன்தாராவை தான் தெரிவு செய்தேன். ஆனால் படத்தை பார்த்த பின்பு நயன்தாரா எனக்கு போன் பண்ணி, அந்த கேரக்டருக்கு சினேகா தான் சரியானவங்க.. அவங்க கரெக்டா நடிச்சிருக்காங்க என்று சொன்னார். நான் முதலில் தேர்வு செய்த நயன்தாராவே இப்படி கூறியது பெருமகிழ்ச்சியாக இருந்தது.

நான் படத்தில் வைத்த மருத்துவமனை காட்சியில் சினேகாவும் விஜயும் சிறப்பாக நடித்திருந்தார்கள். குறிப்பாக மகன் இறந்துவிட்டான் என கூறாமல் தங்களது நடிப்பின் மூலமே வெளிப்படுத்தி இருப்பார்கள்.
இந்த காட்சி இவர்கள் இருவருக்குமான சிறப்புக்காட்சி. நயன்தாரா எனக்கு போன் பண்ணி சினேகாவை பாராட்டியதை நான் இன்னும் சினேகாவிடம் சொல்லவில்லை என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
                             
                            
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!