• Feb 22 2025

பிக் பாஸ் வரலாற்றில் நியாயமற்ற வின்னர் தெரிவு! அர்ச்சனாவை பார்ட்டியிலும் அவாய்ட் செய்த சேனல் தரப்பு! மறைக்கப்பட்ட உண்மை?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வரலாற்றில் இறுதியாக இடம்பெற்ற பிக் பாஸ் சீசன் 7, இரண்டு வீடு,18 போட்டியாளர்கள், 5 வைல்ட் கார்ட் என்ட்ரி என முற்றிலும் மாறுபட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் விறுவிறுப்பு இன்றி காணப்பட்டாலும், பிரதீப் விஷயத்தின் பின்னர் சூடுபிடித்ததது.

இதை தொடர்ந்து பல்வேறு சண்டைகள், வாக்குவாதம், திருப்பங்கள் என சுவாரஸ்யமாக நடைபெற்றது.

இறுதியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாயா அல்லது அர்ச்சனா வருவார் என்றே கணிக்கப்பட்டது.


அதன்படி, பிக் பாஸ் சீசன் 7 ற்கான டைட்டிலை அர்ச்சனா தட்டிச் சென்றார். மாயாவுக்கு 2வது ரன்னர் அப் கிடைத்தது.

எனினும், அர்ச்சனா மக்களின் உண்மையான வாக்குகளால் வெற்றி பெறவில்லை. அவருககு PR டீம் தான் அதிகமாக வாக்கு போட்டது என பல சர்ச்சைகள் கிளம்பின.

இந்த நிலையில், இவற்றை எல்லாம் உறுதி செய்யும் விதமாக, விஜய் டிவி ஏற்பாடு செய்த பார்ட்டியில் டைட்டில் வின்னர் இல்லாமல் கொண்டாட்டம் நடைபெற்றதாக புதிய தகவல் கசிந்துள்ளது.


அதாவது, இறுதியாக டைட்டில் வின்னரை அறிவிக்கும் போது மாயாவுக்கு அதிக குரல் எழுப்பப்பட்டதாகவும், அர்ச்சனா புறக்கணிக்க பட்டதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அர்ச்சனா வெற்றி பெறவும், கமல் ஹசன் கடைமைக்கு எல்லாவற்றையும் முடித்து விட்டு கிளம்பி விட்டாராம். அன்றைய பார்ட்டியில் அர்ச்சனா எங்கே காணோம் என கேட்க விஜய் டிவி சார்பில் அவர் வருவார் என சமாளித்து உள்ளனர்.

ஆனா உண்மையில் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement