• Oct 13 2024

இது என்ன புது கெட்டப்பா இருக்கு? திடீரென ஆளே மாறிய ரச்சிதா கணவர்... மாஸான என்றியா இருக்கேப்பா!!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மஹான் என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானவர் தினேஷ் கோபால்சாமி. இவர் புது கவிதை, பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் என பல தொடர்களில் நடித்து வந்தவர் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.


இவர் தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மனைவியை பிரிந்த இவர் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார்.


தனது அம்மா, அப்பாவுடன் சென்று காரை வாங்கியவர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். இந்த நிலையில் தினேஷ் திடீரென மொட்டை அடித்துக்கொண்டு புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement