• Jan 18 2025

கியூட்டான போட்டோ போட்டு பர்த்டே வாழ்த்து சொன்ன நாயகி... பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் வைரல் பதிவு...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பாகம் 2 ஒளிபரப்பாகி வருகிறது. 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வர கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. முதல் சீசன் முடிந்த வேகத்திலேயே 2வது சீசன் தொடங்கியது. இதில் முதல் சீசனில் நடித்த சிலர் நடிக்கிறார்கள்.


இந்த 2வது சீசன் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை செல்கிறது. இந்த தொடரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கதாநாயகி என்ற ஷோ மூலம் பிரபலமான ஷாலினி {ராஜி} என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


ஆரம்பத்தில் இருந்தே இவரது கதாபாத்திரத்திற்கும், ஷாலினியின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் பாராட்டு கிடைத்து வருகிறது. நடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தனது கணவருடன் நடனம் ஆடும் வீடியோ, சோலோ நடன வீடியோ என ஏதாவது பதிவிட்ட வண்ணம் இருப்பார். தற்போது நடிகை ஷாலினி தனது கணவரின் பிறந்தநாளுக்கு கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார். 

Advertisement

Advertisement