தமிழ் சினிமாவில் 90 களில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ரம்பா திருமணத்தின் குடும்பத்துடன் கனடாவில் செட்டில் ஆகினார். யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
2011 ஆம் ஆண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி கொண்ட இவர் 6 வருடங்களின் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக கலந்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது வீட்டில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இந்த வீட்டில் தான் தனியாக வசிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அருகில் மீனா ,கமல் ,கலா மாஸ்ட்டர் போன்றவர்களின் வீடுகள் அமைந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் dance are you ready நிகழ்ச்சியில் நடுவராக கலந்து வருகின்றார். இதன் காரணமாக கனடாவில் தனது கணவர் பிள்ளைகளை தனியே விட்டு சென்னையில் இருக்கும் தனது வீட்டில் தனியாக வசித்து வருவதாக கூறியுள்ளார். மற்றும் இவரது குடும்பம் ஜூன் மாதம் விடுமுறையில் வந்த உடன் அனைவரும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் போல் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Listen News!