• Jul 04 2026

அஜித்தின் பிறந்தநாளில் ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அந்த 'ரேஸ்' அப்டேட்! அடுத்த பிளான் என்ன?

shali / 2 months ago

Advertisement

Listen News!

மே 1 உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் எனக் கொண்டாடப்படும் முக்கிய நாளாகும். உழைப்பாளர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் இந்த நாளே, அஜித் குமார் பிறந்தநாளாக இருப்பதால், அவரது ரசிகர்களுக்கு இது இரட்டிப்பு கொண்டாட்டமாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் #HBD_AjithKumar போன்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாகி, ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில், இசையமைப்பாளர் G. V.பிரகாஷ் தனது X தளத்தில் பகிர்ந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் சார். நீங்கள் நீங்களாகவே இருந்து எங்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். 

உங்களுடன் இணைந்து ‘ரேஸ்’ திரைப்படத்தில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம், அஜித் நடித்துவரும் அடுத்தப்படமான Race குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷின் இந்த பதிவு, படத்தின் மீது உள்ள ஹைப்பை இன்னும் உயர்த்தியுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வந்த இந்த அப்டேட், ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு சர்ப்ரைஸாகவே அமைந்துள்ளது.


Advertisement

Advertisement