• May 01 2026

பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' இனி உங்கள் போனில்.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு

shali / 1 hour ago

Advertisement

Listen News!

Love Insurance Kompany திரைப்படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ரொமான்டிக் என்டர்டெய்னர் ஆகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தயாரிப்பில் லலித் குமார் மற்றும் நயன்தாரா இணைந்துள்ளனர். கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இப்படத்தில், க்ரித்தி ஷெட்டி, கௌரி ஜி. கிஷன், எஸ்.ஜே. சூர்யா, சீமான் மற்றும் மாளவிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


2026 ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. காதல், காமெடி, மற்றும் நவீன உறவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், இளைஞர்களுக்கு மிகவும் தொடர்புடைய கதைக்களத்தை வழங்குகிறது.

இந்நிலையில், ‘LIK’ திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி, மே 6, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் படம் பார்க்க முடியாதவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும், OTT வெளியீட்டின் மூலம் இப்படம் மேலும் பெரிய பார்வையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement