• Jan 18 2025

வாழ்க்கையே போச்சி... என்ன மன்னிச்சிருங்க அப்பா... கண்ணீருடன் ராஜ்கிரண் மகள் ப்ரியா... நடந்தது என்ன?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் ராஜ்கிரண் அவர்களின் வளர்ப்பு மகள் சீரியல் நடிகர் முனிஷ்ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ப்ரியா நான் முனிஷ்ராஜாவை பிரிந்து விட்டதாகவும் தனது தந்தை ராஜ்கிரணிடம் மன்னிப்பு கேட்டும் தற்போது வீடியோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. 


மிகவும் பிரபலமான நடிகர் தான் ராஜ்கிரண். கம்பிரமான குரலுக்கும், மீசைக்கும் கிராமிய வேடங்களில் தன அதிகம் நடித்திருப்பார். இவருக்கென ரசிகர்களும் பலர் இருக்கிறார்கள். இவருடைய வளர்ப்பு மகள் தான் ப்ரியா. கடந்த 2022 செப்டெம்பர் மாதம் சீரியல் நடிகர் முனிஷ்ராஜாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். 


அதற்கு பிறகு ராஜ்கிரண் எனக்கு மகள் இல்ல ஒரே ஒரு மகன் மட்டும் தான் அவர் பெயர் மொஹமட், நான் தத்தெடுத்து ஒரு மகளை வளர்த்தேன் அவர் பெயர் தான் ஸீனத் ப்ரியா. அவர் என்னிடம் கூறினார் நான் ஒருவரை விரும்புகிறேன் என்று நான் விசாரித்து பார்த்தேன் அந்த பையன் அவ்வளவு நல்லவன் இல்லை அதனால் நான் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை.


அதன் பிறகு தான் அவர்கள் இப்படி வீட்டை விட்டு வெளியே போய் திருமணம் செய்து கொண்டார். போகும் போது நகை பணம் எடுத்து கொண்டு போய்ட்டார். இனி என்னுடைய பெயரை அவர் பாவிக்க கூடாது அப்படி பாவித்தால் நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.


அதன் பிறகு முனிஸ்ராஜ் மற்றும் ப்ரியா நிறைய யூடியூப் சேனலுக்கு பேட்டிகளும் கொடுத்திருந்தார். அதில் ராஜ்கிரணை தாக்கி கதைத்திருந்தார். எனக்கு 37 வயதாகியும் திருமணம் செய்து வைக்க வில்லை. ரொம்ப சுயநலமா இருந்துட்டாங்க என்று கூறியுள்ளார். 

அதன் பிறகு இவர்கள் தொடர்பாக தகவல்கள் அவ்வளவாக அடிப்படவில்லை. இந்நிலையில் தற்போது ப்ரியா ஒரு விடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் நானும் முனிஷ்ராஜாவும் பிரிந்து விட்டோம். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என ராஜ்கரனிடம் மன்னிப்பு கேட்டும் வீடியோ பதிவிட்டுள்ளார்.இதோ தொடர்பான முழுமையான காணொளி இதோ உங்களுக்காக...   


Advertisement

Advertisement