• Apr 01 2025

தலையில் அடித்து கொண்டு அழும் கோமதி... பாக்கியா கண்ணில் படும் ராஜீ... கதிர் கண்ணில் சிக்குவாரா? பரபரப்பான கட்டத்தில் மகா சங்கமம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது அதில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் என்ன இருக்கிறது என பார்ப்போம் வாங்க. 


இன்றைய நாள் எபிசோட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பாட்டு சமைத்து கொண்டு இருக்கிறார்கள். கோமதி சமைத்துக் கொண்டு இருக்க, மீனா தனது புருசனுக்கு போன் எடுக்க செல்கிறார். அங்கு அவர், ராஜி வீட்டை விட்டு போன விடயத்தையும், கல்யாணம் நின்று போன விடயத்தையும் சொல்ல மீனா ஷாக் ஆகிறார்.


நான் அத்தைகிட்ட சொல்லுறன் என, பாக்கியாவிடம் சொல்லிவிட்டு கோமதியை ரூம்க்கு அழைத்து செல்கிறார் மீனா. ஹோட்டலுக்கு செல்லும் போது கோமதி என்ன விஷயம் என கேட்க, ரூம்க்கு வாங்க சொல்லுறேன் என சொல்லி கூட்டிச் செல்கிறார். 


இவ்வாறு ரூம்க்கு செல்லும் போது, ராஜி மறுபக்கம் வாசலில் நிற்கிறார். கோமதி, கதிர், மீனா கண்ணில் அவர் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திரும்பி செல்ல, இவர்களும் ராஜியை கவனிக்காமல் சென்று விடுகிறார்கள்.


பின்பு கதிர், கோமதிக்கு ரூமில் வைத்து ராஜி ஓடிப்போன விஷயத்தை சொல்ல, கோமதி தலையில் அடித்து அழுகிறார். ஹோட்டலில் இருக்கும் ராஜிக்கு கண்ணன் சாப்பாடு வாங்கி வர, ராஜி சாப்பிட மறுக்கிறார். கண்ணன் அவரை சமாதானம் செய்யவும், எனக்கு பயமா இருக்கு என ராஜி சொல்ல, அந்த இடத்திற்கு பாக்கியா வருகிறார்.

சண்டை போடும் இருவரையும் பார்க்கிறார். இனி ராஜி பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் கண்ணில் படுவாரா? பாக்கியா கண்ட விடையத்தை சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement