• Dec 02 2024

15 நிமிடம் கேட்ட கரவொலி... விடுதலை 2-க்கு தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ்.. வீடியோவுடன் சூரி நெகிழ்ச்சி டுவிட்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடித்து இருக்கும் விடுதலை படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை 1 மற்றும் 2ம் பாகம் இரண்டும் திரையிடபட்டன. இந்த திரைப்படம் நன்றாக இருப்பதாக பார்வையாளர்களும் நல்ல விமர்சனங்களை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சூரி டுவிட் பதிவிட்டுள்ளார்.


படம் பார்த்து முடித்து அனைவரும் 15 நிமிடம் கைதட்டி படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். "சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது. தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது" என சூரி  நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இதோ அந்த டுவிட்...

Advertisement

Advertisement