தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என கிட்டத்தட்ட 9 மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியவர் தான் பி.சுசீலா. இவர் முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற 'பால் போலவே' என்ற பாடலுக்காக முதன்முறையாக சிறந்த பெண் பின்னணி பாடகி என்ற தேசிய விருதையும் பி.சுசீலா பெற்றுக் கொண்டார். அத்துடன் பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்ற முதல் பாடகி என்ற பெருமையும் இவருக்கு தான் காணப்படுகின்றது.
சினிமாவில் பாடகியாக உச்சத்தில் இருந்த பி.சுசீலா பாடிய பாடல்கள் அத்தனையும் இன்றளவில் மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அவர் பாடிய பாடல்கள் இடம்பெற்ற படமும் பெரிய வெற்றியை பெற்றது.
இதன் காரணத்தினாலே ஆரம்பத்தில் முன்னணி நடிகைகளான சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு பி.சுசீலா தான் குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டார்கள்.
இந்த நிலையில், தற்போது பி.சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாக உள்ளது. எனினும் இதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.
Listen News!