• Sep 06 2026

கொளுத்துங்கடா பட்டாசை..!! ஒரு சில நிமிடங்களில் எகிறிய மில்லியன் வியூஸ்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்றைய தினம் இந்த படத்தில் இருந்து ட்டைலர் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.

கோட் திரைப்படத்தில் அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் நடித்துள்ளதோடு அவருடன் பிரசாத், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, ஜோகி பாபு, மைக் மோகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே காணப்படுகின்றது.

தற்போது வெளியான கோட் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்க போகின்றது என கூறி வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு வையும் கொண்டாடி வருகின்றார்கள். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.


இந்த நிலையில் கோட் படத்தில் ட்டைலர் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன ஒரு சில நிமிடங்களிலேயே யூடியூப் தளத்தில் ரியல் டைமில் 2.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளார்கள்.

இந்த விடயத்தை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலையும் விஜயின் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement