பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குநர் பிரவீன் காந்தி, சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன்,
இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்ஷா, துஷார் , கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்களை கடக்கவுள்ளது. தற்போது இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் வழமை போல மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டுக்குள்ள இருக்கிற மனுஷங்க நல்லவங்களாகவே இருக்கலாம். ஒரு சிலர்ட அதிகாரத்தை கொடுத்து, அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னால் அவங்க என்னமாதிரியான மனுஷங்களா மாறுறாங்க.. அந்த அதிகாரம் அவங்களை என்ன பண்ணுது? கீழ இருக்கிறவங்க எப்பவும் கீழ இருக்க மாட்டாங்க.. மேல இருக்கிறவங்க எப்பவும் மேல இருக்க மாட்டாங்க..
அதுபோலவே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறவங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை எப்படி புரிஞ்சுகிட்டு இருக்காங்க.. பேசுவோமா? என விஜய் சேதுபதி இன்றைய ப்ரோமோவில் தெரிவித்துள்ளார்.
Listen News!