பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, இதில் இம்முறை 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கடந்த சீசனின் அதிகளவான விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்றனர். அதுபோல இந்த முறை சோசியல் மீடியாவில் பிரபலமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகை ஷகிலா பிரபல தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கலையரசன் பற்றியும் விஜய் டிவி பற்றியும் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் டிவிக்கு அழிவு காலம் என்றே சொல்லுவேன். நான் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட போது என் மீதான கண்ணோட்டம் மாறியது. அந்த டிவியால் தான் முன்னுக்கு வந்தேன். ஆனால் இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போது வயிறு எரிகின்றது.
நான் திவாகர் பற்றி போலீசில் புகார் அளித்திருக்கின்றேன். ஆனால் எப்படி திவாகர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனார்? அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அவரை கார்னர் செய்கின்றனர். இதனால் அவர் அங்கு தான் இருப்பார்.
அதேபோல கலையரசன் அவருடைய மனைவி பற்றி பல புகார்களை கூறினார். அதுபோலவே அவருடைய மனைவியும் கலையரசன் பற்றி பல புகார்களை கூறினார். ஆனால் இறுதியில் அவையெல்லாம் வியூசுக்காகவும் காசுக்காகவும் என்று கூறும் போது இவர்களை எல்லாம் என்ன பண்ணுவது என்று தான் தோணுகிறது.
இவர்களை எல்லாம் விஜய் டிவி எப்படி தேர்வு செய்தது? விஜய் டிவியில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் சேர்ந்து ஆலோசனை நடத்தி தான் ஆட்களை தேர்வு செய்வார்கள். அவர்கள் ஒருவருக்கும் அறிவு இல்லையா? ஒரு பிணந்தின்னியை எப்படி பிக் பாஸ் வீட்டில் அனுப்பினார்கள்? விஜய் டிவியை பார்க்கவே கூடாது. ஒரு தவறான முன்னுதாரணத்தை விஜய் டிவி ஏற்படுத்தி உள்ளது என்றார்.
Listen News!