• Jan 18 2025

"எங்க வயலில் நடவு" நடிகர் சசிகுமார் பகிர்த்திருக்கும் புகைப்படம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இன்று இயக்குனர் நடிகர் என பல பரிமாணங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றும் சசிகுமார்,பாலா மற்றும் அமீர் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.2008 ஆம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியான "சுப்பிரமணியபுரம்" திரைப்படம் அந்தாண்டிற்கான சிறந்த படத்துக்கான ஃபில்ம்பேர் விருதினை வென்றது.

Image

அடுத்து சமுத்திரகனியின் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான நாடோடிகள் திரைப்படம் தமிழ் திரை ரசிகர்களுக்கு பெரு விருந்தாய் அமைந்தது.தொடர்ந்து கிராமப்புற கதைகளை தெரிவு செய்து நடித்த சசிகுமார் அவரது இயல்பான நடிப்பிற்காகபெரிதும் பாராட்டப்பட்டார்.

Image

அண்மையில் சூரியின் "கருடன்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது கம் பாக்கை கொடுத்துள்ளார் நடிகர் சசிகுமார்.இந்நிலையில் சசிகுமார் 'எங்க வயலில் நடவு' என்ற கேப்ஷனுடன் தங்கள் வயலில் நாற்று நடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.நடிகனான போதும் விவசாயத்தை கைவிடாத இவரின் இச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  


Advertisement

Advertisement