மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜயகாந்த் சினிமா ஆசையோடு தனது நண்பர் இம்ராஹிம் ராவுத்தரோடு சென்னை வந்தார். வந்து ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்து ஒரு வழியாக பட வாய்ப்புகளை பெற்று நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சில படங்கள் சரியாக போகாவிட்டாலும் தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து நடித்து வெற்றி பெற்றார்.
விஜயகாந்த்தின் படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டடித்தன. அதன் காரணமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்ற வரிசை தமிழ் சினிமாவில் உருவானது. சொல்லப்போனால் கிராமத்து பகுதிகளில் ரஜினி, கமல் ஹாசனைவிடவும் அதிக மவுசு விஜயகாந்த்துக்கு இருந்தது என்பதுதான் யதார்த்தமான உண்மை.
நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்று அதனையும் திறம்பட கையாண்டார். கடனில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை அவர்தான் அதிலிருந்து மீட்டார்.நடிகர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருந்த அவர் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார்.
ஆனால் இடையில் அவர் எடுத்த சில தவறான முடிவுகள், உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக சறுக்கலை சந்தித்தார். பிறகு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த அவர் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் கொரோனாத் தொற்று காரணத்தினால் தற்பொழுது உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தத் தகவல் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் பணம் பற்றி பேசி வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் என்னய்யா காசு காசு மக்கள் கொடுத்தது அது மக்களுக்கே போகட்டும் எனக்கு என்று ஒரு இடம் தந்திருக்கிறீங்களே அது போதும் செத்தா அர்ணா கயிறைக் கூட எடுத்திட்டு போகப்போறதில்லை என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Captain @iVijayakant .!💔🥺 pic.twitter.com/pqDAIdHfDI
Listen News!