தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக கவின் காணப்படுகின்றார். இவர் நடித்த 'டாடா' படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்' இந்த படத்தின் வெற்றிக்கு பின் கவிஞனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இதைத் தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான ஸ்டார், பிளடி பெக்கர் போன்ற படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதிலும் ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சரிவையே சந்தித்தது.
d_i_a
கவின் தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் 'கிஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாகவே 'கிஸ்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் யாவும் நிறைவடைந்ததாக படக் குழுவினர் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில், நடிகர் கவின் பற்றி பாசிட்டிவ் விமர்சனங்களை அளிக்க விரும்பினாலும், அவர் தொடர்பில் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்து குவிக்கின்றன என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். அதன்படி 'கிஸ்' படப்பிடிப்பில் கவின் செய்த அட்ராசிட்டியை அம்பலப்படுத்தி உள்ளனர்.
அதன்படி அவர்கள் கூறுகையில், கிஸ் படத்தின் சூட்டிங் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடைபெற்று உள்ளது. இவர்களுடைய சூட்டிங் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. அங்கு ஒரு லிப் இருந்தது.
இதன் போது அங்கு சூட்டிங்கு வந்த கவின் லிப்டில் ஏறிய போது அது ஸ்லோவாக சென்றுள்ளது. இதனால் உடனடியாக வெளியேறிய கவின், லிப்டை சரி பண்ணிவிட்டு கூப்பிடுங்கள் என்று நேரே கேரவனுக்கு சென்று தூங்கி உள்ளார்.
எனவே இரண்டாவது மாடியில் நடைபெறும் சூட்டிங்கிற்கு கூட கவினால் செல்ல முடியவில்லை. இதனால் கவினை என்ன சொல்வது? என வலைப்பேச்சு டீமில் உள்ளவர்கள் கிண்டல் அடித்து உள்ளார்கள்.
Listen News!