• Mar 12 2025

அஜித்தை பாட்டுப்பாடி அசத்திய அதிஷ்டசாலி.. ரசிகரின் பெயரை கேட்ட AK_ன் சப்ரைஸ் ரியாக்சன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் பிரபல நடிகராக காணப்படும் அஜித்குமார் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தை கவர்ந்து வருகின்றன. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.

அதே நேரத்தில் அஜித் குமார் நடிகராக மட்டுமில்லாமல் பைக், கார் ரேஸராக துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தார். அதன் பின்பு அவர் வெளியிட்ட வீடியோ, புகைப்படங்கள் என்பன இணையத்தை கவர்ந்து வருகின்றன.

d_i_a

அஜித்குமார் சமூக வலைதள பக்கங்களில் இல்லாவிட்டாலும் அவர் தொடர்பான அப்டேட்டுகளை அவருடைய ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற கார் ரேசிங்கில்  வெற்றி பெற்ற அஜித்தை அவருடைய குடும்பம் கொண்டாடிய விதமும் அதன் போது ஷாலினி கொடுத்த ரியாக்சனும் பலராலும் ரசிக்கப்ட்டது.  


இந்த நிலையில், அஜித்குமாரை நேரில் கண்ட ரசிகர் ஒருவர் அஜித் குமார் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலை பாடி அசத்தியுள்ளார். அஜித் குமாரும் தனது ரசிகரின் பாடலை மெய்மறந்து கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித் குமார் மிகப்பெரிய நடிகராக இருந்த போதும் தனது ரசிகர்களிடம் சகஜமாக பழகுவதும் தனக்காக உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றத்தை கூட கலைத்து, அஜித்- விஜய் வாழவேண்டும் என்று நினைக்காமல் உங்களுக்காக நீங்க வாழுங்க என்று ஒவ்வொரு முறையும் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement