விஜய் டிவியில் ஸ்டேண்டப் காமெடி மூலம் புகழ்பெற்றவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் உலகளவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இதனால் மெலிந்த தேகத்தோடு காணப்பட்டார். இதனால் தனக்கு வந்த பட வாய்ப்புகளையும் தவிர்த்தார்.
பின்பு உடல் நலம் தேறி தற்போது தான் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் இவர் கதாநாயகனாகவும் களமிறங்கி இருந்தார். இவ்வாறான நிலையிலே படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்து நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்த நிலையில், இளம் வயதிலேயே ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் இளவரசு. அதன்படி அவர் கூறுகையில், ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடையில் நிகழ்ச்சிகள் பங்கேற்றவர் ரோபோ சங்கர். பின்பு உடலில் உள்ள அந்த பெயிண்டை அகற்றுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி அதனை துடைத்திருக்கிறார்.
தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் பட்டதன் காரணமாக அவருடைய தோல் வலுவிழந்து உள்ளது. இதில் ஏற்பட்ட குறைபாடுகள் தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கின்றது. இளம் வயதிலேயே அவருடைய உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம் என தெரிவித்துள்ளார்.
Listen News!