• Sep 19 2025

திடீரென மனம் மாறிய பாண்டியன்..! வெறுப்பேத்தும் மீனா அப்பா.. டுடே எபிசொட்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா மாதிரி ஒரு நல்ல பிள்ளை எங்களுக்கு மருமகளாக வந்தது ரொம்ப சந்தோசம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனாவோட அப்பா கேட்ட உடனே பணம் கொடுக்கிற மருமகள் கிடைச்சால் யாருக்குத் தான் சந்தோசமாக இருக்காது சம்மந்தி என்கிறார். பின் பாண்டியன் மீனாவைக் கூப்பிட்டு இந்தாப்பா 10 லட்சத்துக்கான செக் என்று சொல்லிக் கொடுக்கின்றார்.


அதைக் கேட்ட செந்தில் மீனா கிட்ட உடனே வாங்கு என்று சொல்லுறார். அதைப் பார்த்த மீனாவோட அப்பா நான் ஆதங்கதத்தில பேசினத நீங்க தன்மானமாக நினைச்சிட்டிங்களோ என்று கேட்கிறார். பின் மீனா அந்த செக்கை வாங்குறார். அதேமாதிரியே கதிருக்கும் பாண்டியன் செக் கொடுக்கிறார். அதனை அடுத்து சரவணன் கதிர் ட்ராவெல்ஸ் வைக்கிறதுக்கு இடம் பார்த்துக் கொடுக்கிறார்.

அதைப் பார்த்த கதிர் சந்தோசப்படுறார். பின் கதிர் அந்த இடத்தோட வாடகை என்ன மாதிரி என்று எல்லாத்தையும் விசாரிக்கிறார். மறுபக்கம் செந்தில் மீனா கிட்ட இண்டைக்கு வீட்டில நடந்த விஷயத்தைக் கொண்டாடுறதுக்கு ஹோட்டல் போவமா என்று கேட்கிறார். அதைக் கேட்ட மீனா ஏன் இப்புடி பொறுப்பில்லாத மாதிரி கதைக்கிறீங்க என்று கேட்கிறார்.


அதனை அடுத்து பாண்டியன் வீட்டில கதிரைக் காணேல என்று சொல்லிப் பேசிக்கொண்டிருக்கிறார். பின் கதிர் ட்ராவெல்ஸ் பண்ணுறதுக்கு இடம் பார்த்திட்டன் என்று சொல்லி ஸ்வீட் கொடுக்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் சந்தோசப்படுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement