• Jan 19 2025

நாங்க பிரிய இல்ல... இப்ப கொஞ்சம் கோவமா இருக்கா புஜ்ஜி... நாங்க சேருவோம் வீடியோவும் போடுவம்... டோரா அதிரடி பேட்டி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பெண்ணும் பெண்ணும் காதலா ! என்று எல்லோரையும்  வியந்து பார்க்க வைத்தவர்கள்   சமூகவலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமானவர்கள் தான் டோரா மற்றும் புஜ்ஜி  . இருவருமே பெண்களாக இருந்த போதிலும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் . 

ஒரு சில நெகடிவ் கருத்துக்கள் வந்தாலும் ஒரு சில நல்ல விமர்சனங்களும் வந்தது . இவர்களை ஒரு பொழுதுபோக்குக்காக பார்த்து ரசித்த ரசிகர்களும் உண்டு . இந் நிலையில் சேரும் காதல் என்று நம்பும் அளவுக்கு இருந்த இவர்களுடைய காதல் ஒரு சில காரணங்களால் சமீபத்தில் பிரிவை சந்தித்தது . 


இவர்களுடைய பிரிவு சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி  வந்தது . இந் நிலையில் இன்னும் இருவரும் பிரிந்த நிலையிலேயே இருக்கிறார்கள் . அந் நிலையில் ஒரு பேட்டியின் போது டோரா  என்று அழைக்கப்படும் ஹரி பேட்டியில் என்ன கதைத்துள்ளார் என்பதை  பார்க்கலாம் வாருங்கள் ,


" ஒரு சின்ன ஒரு புரிந்துணர்வு இல்லாத பிரச்சனை தான் அப்பிடியே வாழ்க்கை முழுதும்  பிரிஞ்சிட்டம்  என்று இல்லை . எப்ப என்றாலும் சேர்ந்திருவோம் , டோரா என் மேல ரொம்ப கோவத்தில இருக்கிறா அதனால் நான் என்ன கதைத்தாலும் தப்பா தான் தெரியும் . கோவம் கொஞ்சம் குறைந்த உடனே சரி ஆகிருவாங்க . 


டோரா இப்பிடி எல்லாம் பண்ணுவாங்க என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அவங்க இப்பிடி பண்ணுற ஆளும் இல்லை . ஏன் புஜ்ஜி அழுது எல்லாம் வீடியோ போட்டா என்று இதுவரை எனக்கு தெரியல . எல்லா உறவுகளுக்குள்ளேயும் சண்டை வரும் தான் அதே போல தான் எங்களுக்கும் சண்டை அது சரி  ஆகிவிடும் . 


நான் ரொம்பவே டோராவை மிஸ் பண்றேன் . எங்கயுமே என்னை விட்டு கொடுக்க மாட்டாள் . ஒரு மாதத்துக்குள்ள போய் நான் கதைப்பேன் . நாங்க இரண்டு பேரும் சேருவோம் . ஒன்றா வீடியோவும் போடுவம் என்று ஹரி உறுதியாக கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement