கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின எட்டாவது சீசன் கிட்டத்தட்ட 106 நாட்களுடன் நிறைவுக்கு வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுற்ற பிறகும் அது தொடர்பான சம்பவங்கள் போட்டியாளர்களின் அதிரடி தகவல்கள் என்பன வெளியாகிக் கொண்டுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும், இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும் பெற்றார். மூன்றாவது இடத்தை விஷால் பிடித்தார். இறுதியில் பவித்ராவும் ரயானும் எலிமினேட்டாகி வெளியேறி இருந்தார்கள். ஆனாலும் இவர்கள் அனைவருக்கும் சமமான வரவேற்பு மக்களால் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ரயான் நடித்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தினை பார்க்கச் சென்றுள்ளார்கள். இதன்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கொடுத்த பேட்டி என்பன தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி ஜாக்குலின், சவுந்தர்யா, ரயான் ஆகிய மூன்று பேரும் ரசிகர்களுக்கு வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளனர். மேலும் இதன்போது ஜாக்குலின் நாங்க கோவா கேங் என க்யூட்டாக தெரிவித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!