விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ்நாடு டிஆர்பியில் முதல் 10 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதற்காகவே பிரபல சேனல்களும் போட்டி போட்டு புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றன.
டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்த சீரியல்களை சட்டென முடித்தும் விடுகின்றன. அதன்படி சமீபத்தில் ஒரு சில சீரியல்கள் குறுகிய நாட்களுக்குள்ளேயே முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரவுள்ள சீரியல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அண்மையில் தொடங்கப்பட்ட வீட்டுக்கு வீடு வாசல்படி சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் காட்சியை நெருங்க உள்ளதாம்.
இந்த சீரியல் முடிவதற்கு உள்ளையே இதில் கதாநாயகன் ஆன திரவியம் அடுத்த தொடரில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக சிந்து பைரவி என்ற நாடகம் ஒளிபரப்பாக உள்ளது.
இதேவேளை விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி போன்ற சீரியல்கள் ஒவ்வொரு கதைக்களங்களுடன் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!