அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் ரயான், யூடியூபர் சாரா, இளவரசு உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இந்த படம் காமெடி கலந்த ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் சிங்கிள் ஆளாகவே காமெடி செய்து ரசிகர்களை ஹரிபாஸ்கர் சிரிக்க வைத்துள்ளார். மேலும் லாஸ்லியா, ரயானுடைய நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்ட ரயான் ஹவுஸ் கீப்பிங் படத்தில் நடித்துள்ளார். அதனை பார்ப்பதற்காக அவருடன் பிக்பாஸில் இருந்த சக போட்டியாளர்களும் திரையரங்குகளுக்கு என்ட்ரி கொடுத்ததோடு இந்த படம் பற்றி பேட்டியும் கொடுத்துள்ளனர். தற்போது அவர்கள் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
இதன்போது ஜாக்குலின் கூறுகையில் , நாங்கள் படம் பார்த்துட்டு இப்பதான் வந்தோம்.. படம் சூப்பரா இருக்குது. இப்பொழுது இருக்கிற இளைஞர்கள் எல்லாம் எப்படி இருக்காங்க... ட்ரெண்ட் எப்படி இருக்கு? இந்த டூ கே கிட்ஸ் எப்படி இருப்பாங்க.. அந்த மாதிரி இருந்தது... நான் 90ஸ் கிட்ஸ் என்பதால் எனக்கு சில விஷயங்கள் புதுசா இருந்தது.
இந்த படத்தில் ரயான் ரொம்ப க்யூட்டாக இருந்தார். படத்தில் ரயானை அடிக்கும் போது எங்களுக்கு கோவமா வந்துச்சு.. அதனால நாங்க ரயானை அடிக்க வேண்டாம் என்று கத்தி கூச்சலிட்டோம்... மொத்தத்துல இந்த படம் ஃபுல்லா என்டர்டைமென்ட் பண்ணக்கூடிய மாதிரி இருக்குது... குடும்பமா வந்து பாருங்க.. என்று ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.
மேலும் இடையில் பேசிய ஆனந்தி, பிக்பாஸில் இருந்த மாதிரி ரயான் ஒளிஞ்சு இருக்க மாட்டார். நிறைய படங்கள் பண்ணுவார் என கலாய்த்து உள்ளார்.
Listen News!