• Jan 12 2025

தளபதி 69 கதையை உளறிய விடிவி கணேஷ்! மைக்கை பிடுங்கி உடனே நிறுத்திய இயக்குநர்!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண திரைப்படங்கள் ரிலீசாக இருக்கிறது. அந்த வரிசையில் நடிகர் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சங்கராந்தி வஸ்துன்னாம் படம் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.


இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய காமெடி நடிகர் விடிவி கணேஷ் தளபதி 69 படம் பற்றி மேடையில்  ஓபனாக பேச அவரை பேச விடாமல் இயக்குநர் அனில் ரவிப்புடி தடுத்த விடயம் தற்போது வைரலாகி வருகிறது.


எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் தளபதி 69 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.இது தளபதிக்கு இறுதி திரைப்படம். அந்த படத்தின் கதை குறித்த தகவலை விடிவி கணேஷ் மேடையில் பேசிய நிலையில் தான் அவரை இயக்குநர் அனில் ரவிப்புடி தடுத்துவிட்டார். அவர் கூறும் போதே தளபதி 69 படத்தின் கதை இதுதான் என்பது ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது.


படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடிவி கணேஷ் பேசுகையில் "தளபதி விஜய் பகவந்த் கேசரி படத்தை 5 தடவை பார்த்துவிட்டு அனில் ரவிப்புடியிடம் அதை ரீமேக் பண்ணலாம் என்று விஜய் கேட்டதாக கூறினார்" என்று சொல்லும் போதே உடனடியாக மேடையில் இருந்த இயக்குநர் அனில் ரவிப்புடி விடிவி கணேஷை தடுத்து நிறுத்தி மைக்கை வாங்கி இவ்வாறு கூறினார்.


அவர் கூறுகையில் " தளபதி 69 படத்தை இயக்க விஜய் சந்தித்து பேசியது உண்மை தான். அவர் ரொம்பவே சூப்பரான கேரக்டர். தளபதி 69 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் அந்த படத்தின் கதையை சொல்வது சரியல்ல. அதனால் தான் விடிவி கணேஷ் சாரை தடுத்தேன். தளபதி 69 படம் பகவந்த் கேசரி ரீமேக்கா அல்லது வேறு கதையா என்பது தெரியாமல் பேசக்கூடாது"  என்று கூறினார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement