பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இன்னும் ஒரு வாரத்தில் நிறைவுக்கு வர உள்ளது. இந்த சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள், ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என மொத்தமாக 24 பேர் கலந்து கொண்டார்கள். இதில் தற்போது இறுதி வாரத்திற்குள் ஆறு பேர் மட்டுமே என்ட்ரி ஆகி உள்ளனர்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்ற எட்டு போட்டியாளர்களும் ரீ என்ட்ரி கொடுத்து தங்களுடைய பங்கிற்கு விளையாடி வந்ததனால் கடந்த வாரம் முழுக்க பரபரப்பாக சென்றது. அதிலும் பழைய போட்டியாளர்கள் தமது வன்மத்தை கொட்டி தீர்த்து இருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இறுதியாக தீபக், முத்துக்குமரன், விஷால், ரயான், அருண், ஜாக்குலின், சௌந்தர்யா, பவித்ரா ஆகிய எட்டு பேரும் எஞ்சி இருந்தார்கள். இதில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் ரயான் வெற்றி பெற்றதால் ஏனைய போட்டியாளர்கள் நாமினேட் ஆகி இருந்தார்கள்.
இதை தொடர்ந்து நேற்றைய தினம் குறைவான வாக்குகளை பெற்ற அருண்பிரசாத் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எலிமினேட் ஆனார்கள். இவர்கள் பைனலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென எலிமினேட் ஆனது சகப் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக காணப்பட்டது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 நாட்கள் இருந்த அருண் பிரசாத்துக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 19 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!