பிரபல நடிகர் சீயான் விக்ரமின் 62வது திரைப்படமான வீர தீர சூரன் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீசாகி வைரலாக நிலையில். தற்போது அந்த படத்தின் "கள்ளூறும் காத்து என் மேல.." என்ற பாடல் ரிலீஸாகியுள்ளது.
சேதுபதி, சித்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் இருக்கும் "கல்லூரும் காத்து என் மேல" என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை தனது டுவிட்டர் மற்றும் சமூகவலைத்தள பக்கங்களில் ஷேர் செய்த நடிகர் விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை டேக் செய்து " என்னுடைய இதயத்தை இழுபவருக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
என்னோட அடுத்த ‘heart-tugger’க்கு நன்றி @gvprakash!! ❤️#Kalloorum #VeeraDheeraSooran pic.twitter.com/GsNJwmgo74
Listen News!