• Jul 27 2025

இந்த புகைப்படத்தில இருக்கிற டாப் நடிகை யார் தெரியுமா.? வைரலான அப்டேட்.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய திரையுலக ரசிகர்களுக்கே பரிச்சயமான பெயராக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. தனது அழகு, நடிப்பு திறமை, மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தால் பலர் மனதில் இடம் பிடித்துள்ள பூஜா ஹெக்டே தற்போது ஒரு குழந்தைப் புகைப்படத்துடன் மீண்டும் இணையத்தள உலகை கவர்ந்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் தற்போது பரவும் ஒரு புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஒரு சிம்பிளான உடையில், பெரிய பெரிய கண்கள் மற்றும் இனிமையான புன்னகையுடன் உள்ள அந்த சிறுமி யார் என்பது பலருக்கே தெரியாமல், “இவங்க யாரு?” என்ற கேள்வியோடு புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.


இதற்கு பதிலாக, ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும்போதே உண்மை தெரியவந்தது, அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை, நம்ம பூஜா ஹெக்டே தான்! இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், “இவங்க அப்பவே இவ்வளவு அழகா இருக்கிறாங்க..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement