• Apr 15 2026

சிறந்த இசையமைப்பாளர் விருது! தட்டி சென்ற அனிருத்! வைரல் புகைப்படம் இதோ!

shali / 2 years ago

Advertisement

Listen News!

இளம் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு 2024ன் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 


இந்த நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர். அந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆகியது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைந்திருந்தார்.


இந்த நிலையில் ’ஜவான்’ படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக அனிருத் அவர்களுக்கு தாதா சாகேப்  சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருது கிடைத்தது குறித்து அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement