• Jan 18 2025

பயில்வானின் பகீர் பேச்சி... 2 மணி நேரத்துக்கு 13 லட்சம்... சர்ச்சையில் சிக்கிய மீனா...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பயில்வான் ரங்கநாதன் மீனாவை பற்றி தனது யூடியூபில் கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. 


இதைத்தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மீனா, தன்னுடைய மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்திவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் சாகர் உயிரிழந்த நிலையில் வெளியில் வராமல் மனவேதனையில் இருந்தார். அதன் பிறகு திரைத் துறையினரால் அவருக்கு மீனா 50 என்ற விழா கொண்டாடப்பட்டது.


இப்போது சினிமா வாய்ப்பு மீனாவுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் மீனா பேரம் பேசியுள்ளதாக பயில்வான் கூறி இருக்கிறார். அதாவது பத்திரிக்கையாளராக பயில்வான் வேலை செய்யும் போது பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்க செல்வார்களாம்.


இந்த பேட்டிக்காக இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் மீனா கேட்டிருக்கிறார். அவர்களும் தங்களது யூடியூப் சேனல் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக மீனா கேட்ட தொகையை கொடுத்து பேட்டி எடுத்திருப்பதாக பயில்வான் கூறியிருக்கிறார். ஒரு பேட்டிக்கு இவ்வளவு தொகையா என்பது ஆச்சரியம் அளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement