தமிழ் திரையுலகின் பாரம்பரிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ரோபோ சங்கர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் பெருமளவில் இடம் பிடித்தவர்.
அவர் சமீபத்தில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உயிரிழந்திருந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மிகுந்த கவலையோடு உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது மனித நேயத்தையும் சமூகப் பொறுப்பையும் வெளிப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கருக்கு முதல் நபராக சென்று, அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் விஜய் சேதுபதி ரூபாய் ஒரு லட்சத்தினை மருத்துவ செலவுகளுக்காக வழங்கியுள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!