• Oct 26 2025

‘லோகா’ OTT வெளியீட்டிற்கு மறுப்பு தெரிவித்த துல்கர் சல்மான்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தென்னிந்திய திரை உலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல சாதனைகளை படைத்தவர் துல்கர் சல்மான், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள 'லோகா' திரைப்படத்தின் OTT வெளியீடு தொடர்பான ஊடக தகவல்களுக்கு நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.


சமீபத்தில், பல இணைய தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘லோகா’ திரைப்படம் விரைவில் OTT பிளாட்பாரங்களில் வெளியாகும் என பரபரப்பான தகவல்கள் பரவத் தொடங்கியது. இதன் பின்னணி மற்றும் உண்மை நிலை குறித்து ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் ஆர்வமாக இருந்தனர்.


இந்நிலையில் துல்கர் சல்மான்,லோகா திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், போலி செய்திகளை புறக்கணித்து, அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக காத்திருங்கள் என தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement