• Dec 12 2025

திருமணத்திற்குப் பிறகு சமந்தாவின் அழகு கொஞ்சம் கூடிடுச்சு போலயே.. வைரலான கிளிக்ஸ்

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழும் சமந்தா, சமீபத்தில் தனிப்பட்ட வாழ்க்கையால் பெரும் கவனம் பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களாக, சமந்தா, திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ராஜ் நிடிமோருவை காதலிக்கிறாரென செய்திகள் வெளியாகி, ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


சமீபத்தில் அந்த வதந்திகள் உண்மை தான் என சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டிருந்தனர். திருமண நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன. 

இந்நிலையில், தற்பொழுது திருமணத்திற்கு பிறகு வெளியான புகைப்படங்களில், சமந்தா கழுத்தில் மஞ்சள் தாலியுடன், அழகாக காட்சியளித்துள்ளார். 


இந்த புகைப்படங்கள் வெளியான பிறகு சமூக வலைத்தளங்களில் ‘லைக்’ மற்றும் ‘கமெண்ட்ஸ்’ குவிந்து வருகின்றன. சிலர், "Sam எப்பவுமே evergreen beauty.." என்ற பதிவினையும் வெளியிட்டு ஷேர் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement