• Oct 30 2024

தர்ஷா குப்தா வீட்டில் திடீரென குவித்த ஊர்மக்கள்..! பிக் பாஸ் நெகட்டிவிட்டி தான் காரணமா?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.  இந்த சீசனில் பலரின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமே விஜய் சேதுபதி தான். உலக நாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, ஆர்ஜே அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

எனினும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வாரங்களை கடந்த நிலையில் இதில் மூன்று பேர் எலிமினேட் ஆகி வெளியே சென்றுள்ளார்கள். அதில் முதலாவதாக தயாரிப்பாளர் ரவிந்தர் எலிமினேட் ஆனார். அதன் பின்பு ஆர்னவ் எலிமினேட் ஆனார். இறுதியாக தர்ஷா குப்தா எலிமினேட் ஆகி சென்றிருந்தார்.

d_i_a

இந்த நிலையில், தர்ஷா குப்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியான பிறகு அவருடைய வீட்டில் திடீரென ஊர் மக்கள் குவிந்துள்ளதாக தற்போது இணையதளத்தில் பரபரப்பு செய்திகள் பரவி இருந்தன. 


அதன்படி இன்ஸ்டா பிரபலமான தர்ஷா குப்தா வீட்டில் திடீரென மக்கள் குவிந்ததை பார்த்து தன் மீது நெகட்டிவ் எண்ணம் தோன்றியதாகவும்,  பிக் பாஸ் வீட்டில் தான் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தினால் இவ்வாறான சர்ச்சை எழுந்ததாகவும் முதலில் நினைத்து உள்ளாராம் தர்ஷா.

ஆனால் அதன் பின்பு அவரைப் பார்த்த இன்ஸ்டா ரசிகர்கள் மற்றும் ஊர் மக்கள் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடியதற்காக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு அவருக்கு தமது ஆதரவையும் தெரிவித்துள்ளார்களாம். இதனால் தர்ஷா குப்தா ரொம்பவும் எமோஷனலாகி இருந்ததாக தற்போது தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement