• Apr 27 2024

ராமுக்கு விக்ரமன் கொடுத்த செம சர்ப்ரைஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.இந்த சீசனில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில் அனைவருமே அசத்தலாக தங்களது திறனை நிரூபித்திருந்தனர். 

இதனால் ஒவ்வொரு எபிசோடுகளும் மிக விறுவிறுப்பாக சென்றதுடன் மட்டுமில்லாமல் அனைத்து போட்டியாளர்களுக்கும் பிரத்யேகமாக ரசிகர் கூட்டமும் உருவாகி உள்ளது. இறுதியில் பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர்.



இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்தாலும் இதுகுறித்த செய்திகள் அடிக்கடி இணையத்தை ஆக்கிரமித்து தான் வருகிறது.

அப்படி இருக்கையில் போட்டியாளர் ராமிற்கு விக்ரமன் கொடுத்த பரிசு தொடர்பான பதிவு அதிக கவனம் பெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமன் மற்றும் ராம் ஆகிய இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததையடுத்து ராமை விக்ரமன் சந்தித்துள்ளதாக தெரிகிறது.


அத்தோடு இந்த சமயத்தில், ராமிற்கு "The GodFather" என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை பெரிய போட்டோ ஃபிரேமாக பரிசளித்துள்ளார் விக்ரமன்.

மேலும் இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராம், தனக்கு அளித்த பரிசுக்கு விக்ரமனிடம் நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும், மனம் நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டுள்ள ராம், கடைசியில் அறம் வெல்லும் என்றும் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement