• Apr 27 2024

குயின்சி சொன்ன விடயத்தால் சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாம தவிச்ச விக்ரமன்...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இவ்வாறுஇருக்கையில் தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி  சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். 

இவ்வாறுஇருக்கையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

எனினும் அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.


இவ்வாறுஇருக்கையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இதை முன்னிட்டு போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் வலம்வருகின்றனர். sacrifice டாஸ்க்கின் காரணமாக அமுதவாணன் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் காணப்படுகிறார். இந்த சூழ்நிலையில், அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகியோர் அமர்ந்து பொங்கல் சாப்பிடுகின்றனர். அப்போது குயின்சியும் அவர்களது அருகே அமர்ந்திருக்கிறார். அப்போது, குயின்சி,"டால்பின்" என அமுதவாணனை அழைக்கிறார்.


அப்போது அமுது,"ஐயோ, டால்பின் வாயா எல்லாம் ரீச் ஆச்சுன்னா, காலேஜ்க்கு எல்லாம் எப்படி கெஸ்ட்டா போவேன்?" என சிரிக்க விக்ரமனும் சிரிக்கிறார். தொடர்ந்து பேசும் குயின்சி,"அப்படி சொல்லி கத்தப்போறாங்க. அத்தோடு மாஸ்-ஆ பாட்டு எல்லாம் போட்டு உள்ள போய் அமுது மைக்கை எடுத்த உடனே டால்பின்னு கத்தப்போறாங்க" என சொல்ல விக்ரமன் மற்றும் அமுதவாணன் இருவரும் சிரிக்கின்றனர்.


அத்தோடு , குயின்சி,"வெளில போயிட்டு நாங்களே உயிரோட வந்துட்டோம். உங்களுக்கு பிரச்சனை இல்ல" என சொல்ல விக்ரமன் குலுங்கி சிரிக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement