• Dec 04 2023

சகதி, கோமணம்,காலில் செருப்பு இல்லாமல் தான் இருப்போம்... ஷூட்டிங் ஸ்பாட் இப்படி தான் இருக்கும்... இருந்து சாப்பிட நேரம் இல்லை... தங்கலான் குறித்து சுவாரஷ்ய தகவலை பகிர்ந்த விக்ரம்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் குறித்து நடிகர் விக்ரம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல சுவாரஷ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். 

தமிழ்  மாத்திரமன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 26, 2024 அன்று திரையரங்குகளில் தங்கலான் வெளியாக உள்ளது. நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட பீரியட் படத்தில் பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் மற்றும் ஹரிகிருஷ்ணன் அன்புதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இத்திரைப்படத்தின் நடிகர் விக்ரம் படம் குறித்து பேசுகையில் வரலாறு சம்மந்தமாக நாங்கள் மறக்கும் விடையத்தை இப்போது இருக்க கூடிய இளைய தலைமுறைக்கு வழங்குவது தான் தங்கலான் சிறப்பு. உண்மையாக நடந்த கதையை படமாக எடுத்துள்ளோம். பெரிய செட் போட்டு சூட் எடுக்கவில்லை kgfல் போய் தங்கி  இருந்தோம். இரவு நேரம் சரியான குளிராக இருக்கும் , பகல் நேரம் சரியான வெயிலாக இருக்கும். 


ரஞ்சித் உடனே 2 தேள் கொண்டு வா ,பாம்பு புடிச்சிட்டு வா என்று சொல்லுவார். உடனே கொண்டு வந்து தருவார்கள் ஏனென்றால் அது முழுவதும் காடு பகுதி எந்த பக்கம் போனாலும் விஷஉயிரினங்கள் தான் இருக்கும். நாங்கள் செருப்பு இல்லாமல் நடந்தோம் முள்ளு கல்லு என்று எங்கு பார்த்தாலும் பயங்கரமா இருக்கும். 


அவர்களின் வாழ்க்கை முறையோடு வாழ்ந்தோம். அங்க ஷூட்டிங் போனாலே அந்த கோமணம்,செருப்பு இல்லாமத்தான் இருப்போம். லைவா பேசுறது என்பது கஷ்டம் சில நேரம் முக பாவனைக்கு ஏற்றால் போல குரல் அமையாது இரண்டையும் பார்த்து கதைக்க வேண்டும். காலையில் ஆரம்பித்தாள் அந்த வேலை நடந்துகொண்டே இருக்கும். இருந்து சாப்பிடுவதற்கு , கதைப்பதற்கு நேரம் இல்லை. 


ஷூட்டிங் இடத்திற்கு போன உடனே சகதி எடுத்து உடம்பு முழுவதும் அப்பி விடுவார்கள். சூட் முடியும் வரை அப்படியேத்தான் இருக்க வேண்டும். அப்படியே இடையில் இயக்குனரையும் புகழ்ந்து பேசிய இவர் இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார். தங்கலான் இப்படி ஒரு புதிய அனுபவத்தை தந்தது என மகிழ்ச்சியாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement