• Apr 15 2026

விக்ரம் எல்லாம் நடிகரே இல்ல.. அவருக்கு நடிக்கவே தெரியாது.! இயக்குநர் ராஜகுமாரன் பகீர்

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிப்பு திறன், ஸ்டைல், கதாபாத்திரம் குறித்து நடக்கும் விவாதங்களுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், இயக்குநர் ராஜகுமாரன் சமீபத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். 


குறிப்பாக நடிகர் விக்ரம் குறித்து அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு, ரசிகர்களும் சினிமா வட்டாரத்தினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிலர் அதை அவரின் நேர்மையான பார்வையாக ஏற்றுக் கொண்டாலும், பெரும்பாலான ரசிகர்கள் அதை எதிர்த்தும் சில கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ராஜகுமாரன் அதன்போது, “ஒரு நடிகன்னா குளோஸ் அப்ல கட் பண்ற வரைக்கும் நடிக்கணும்... அவன் தான் நடிகன். விக்ரமால அப்படி நடிக்க முடியாது. அவரை சிறந்த நடிகர்னு நான் ஏத்துக்கவே மாட்டேன். ஒன்னு ரஜினி மாதிரி நடிப்பார். இல்ல கமல் மாதிரி நடிப்பார். 


இந்த இரண்டைத் தாண்டி அவருக்கு நடிக்கவே தெரியாது. ஒன்னு மொட்டை அடிச்சி மீசையை எடுத்து நடிப்பார். அதை தவிர மேக்கப்பே இல்லாமல் சாதாரணமா நடிக்க சொன்னா நடிக்க முடியாது.” என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement