• Apr 15 2026

சக நடிகையின் காலில் விழுந்த ரஜினி.! எதற்காகத் தெரியுமா.? வைரலான போட்டோஸ்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில், கலாசாரப் பெருமையின் அரிதான தருணங்கள் எப்பொழுதும் ரசிகர்களின் மனதில் நிலைத்துவிடுகின்றது. அப்படியான ஒரு வரலாற்றுத் தருணம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. 


இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மூத்த நடிகை டாக்டர் வைஜெயந்திமாலா அவர்களுக்கு “கலாசார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய்ஜிபி விருது” வழங்கும் போது, அவருடைய காலில் குனிந்து விழுந்து ஆசி பெற்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாதாரணமாக ரசிகர்கள் தங்களின் விருப்ப நட்சத்திரங்களை கும்பிட்டு மரியாதை செலுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த நட்சத்திரமான ரஜினிகாந்த், மற்றொரு முன்னணி மூத்த கலைஞரிடம் இத்தகைய மரியாதையை வெளிப்படுத்தியது ரசிகர்களையும், திரையுலகத்தையும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் நடைபெற்ற இந்தக் கலை சார்ந்த விழாவில், இந்திய சினிமா, நடனம், பாரம்பரியம் ஆகியவற்றில் அளிக்க முடியாத பங்களிப்பை வழங்கிய டாக்டர் வைஜெயந்திமாலா அவர்களுக்கு, “கலாசார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய்ஜிபி விருது” வழங்கப்பட்டது.

இந்த விருது, கலாசார பாரம்பரியத்தை காத்து வளர்த்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறப்பான கௌரவமாகும். இந்த விழாவில் விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் வைஜெயந்திமாலாவிற்கு விருது வழங்கி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement