• Jan 19 2025

கஷ்டப்பட்டு நடிச்சும் பலனில்லாமல் போச்சே.. ‘தங்கலான்’ தயாரிப்பாளர், இயக்குனர் மீது கடும் கோபத்தில் விக்ரம்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்தது என்றும் ஆனால் தேர்தல் காரணமாகத்தான் தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது விக்ரமுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை மற்றும் தன்னுடைய கேரக்டர் அட்டகாசமாக இருந்ததை அடுத்து விக்ரம் தனது உயிரை கொடுத்து நடித்ததாகவும் இந்த படத்திற்காக பல ரிஸ்க் எடுத்ததாகவும் அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.  ஆனால் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்த ஒரு படத்தை ரிலீஸ் செய்யாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் காலதாமதம் ஆக்கி வருவது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.



குறிப்பாக ‘தங்கலான்’ படத்தில் சில நுட்பமான தொழில் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் அதை முடிக்க ஒரு சில வாரங்களாகவும் கூறப்பட்ட நிலையில் அதற்கான பட்ஜெட்டை ஒதுக்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா காலதாமதம் செய்வதாகவும் அதுமட்டுமின்றி ‘தங்கலான்’ படத்தை அப்படியே அவர் விட்டுவிட்டு பாலிவுட் பக்கம் சென்று விட அங்கு அவர் படத்தை தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் இயக்குனர் பா ரஞ்சித், ‘தங்கலான்’  படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனிக்காமல் அடுத்த படத்திற்கான டிஸ்கஸ் செய்ய அமர்ந்து விட்டதாகவும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவரும் ‘தங்கலான்’ படத்தை கண்டு கொள்ளவில்லை என்று விக்ரம் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கும் நிலையில் தற்போது ‘தங்கலான்’ படமும் தாமதம் ஆகி வருவதை அடுத்து அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement