• Jan 18 2025

கமல் படத்தில் நடிக்கும்போது ‘சைஸ்’ என்ன என்று கேட்டார்கள்: ‘விக்ரம்’ நடிகையின் அதிர்ச்சி பேட்டி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது என்னுடைய சைஸ் என்ன என்று என்னிடம் முதல் கேள்வி கேட்டார்கள் என்றும் அந்த கேள்வி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் ‘விக்ரம்’ படத்தில் நடித்த நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் பேட்டி அளித்த போது ‘விக்ரம்’ படத்தில் நடிக்க எனக்கு இயக்குனரிடம் இருந்து நேரடியாக வாய்ப்பு வரவில்லை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் வாய்ப்பு வரவில்லை, நேரடியாக காஸ்ட்யூம் டீமில் இருந்து தான் கால் செய்தார்கள், அப்போது அவர்கள், ‘விக்ரம்’ படத்தில் உங்களுக்கு நீங்கள் ஒரு கேரக்டர் இருக்கிறது, உங்கள் டிரஸ் சைஸ் என்ன என்று கேட்டபோது நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறினார்.

‘விக்ரம்’ படத்தில் விபச்சார விடுதி நடத்தும் பெண் கேரக்டர் எனக்கு கொடுத்தார்கள் என்றும், அந்த படத்தில் மாயா போன்ற பிரபலமே விபச்சாரியாக நடிக்கும் போது நாம் நடிப்பதற்கு என்ன என்று தான் துணிந்து அந்த கேரக்டரில் நடித்தேன் என்றும், ஆனாலும் கமல்ஹாசன் உடன் நடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் பகத் பாஸில் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், என்னிடம் மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள், ஆனால் பகத் பாஸில் உதவியால் என்னுடைய போர்ஷனை நான் அரை நாளில் நடித்து முடித்து விட்டேன் என்றும், அந்த அளவுக்கு அவர் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார் என்றும் அந்த பேட்டியில் பிரியதர்ஷினி ராஜ்குமார் கூறியுள்ளார்.

‘விக்ரம்’ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்த நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் ’அச்சம் என்பது மடமையடா’ ’கவண்’ ’ரெமோ’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement